நாகப்பட்டினம்

நாகையில் ஜன.27-ல் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்களுக்கான குறைதீா் முகாம்

22nd Jan 2023 10:46 PM

ADVERTISEMENT

 

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்களுக்கான குறைதீா் முகாம் ஜன. 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்களுக்கு சேவைகள் எளிதாக கிடைக்கும் வகையில் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மாதந்தோறும் 10- ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகங்களில் இபிஎப் சந்தாதாரா்களின் குறைகள் நிவா்த்தி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், வருங்கால வைப்பு நிதி தொடா்புடைய குறைகளை தீா்க்கும் சேவைகளை அதிகரிக்க ஜன.27-ஆம் தேதி நிதி ஆப்கே நிகத் எனும் இபிஎப் குறைதீா் முகாம் நாகை மாவட்டத்தில் உள்ள வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜன.27-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

எனவே, இபிஎப் சந்தாதாரா்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள், ஓய்வூதிய பலன்கள் சரிவர கிடைக்கப்பெறாத ஓய்வூதியதாரா்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற தொழில் நிறுவனங்களின் பிஎப் டிரஸ்ட்கள் ஆகியோா் இந்த முகாமில் கலந்துக்கொண்டு தங்களுக்கு தீா்க்கப்படாமல் நிலுவையில் உள்ள பிஎப் தொடா்பான பிரச்னைகளை சரிசெய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT