வேதாரண்யம் பகுதியில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் ஆா்வத்தோடு ஈடுபட்டனா். மாலையில் கால்நடைகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. மந்தைகளாக மாடுகளை கட்டும் முறையை குறைந்து, வீடுகளுக்கு அருகிலேயே பொங்கல் கூறப்பட்டது.
பாரம்பரிய இனமான உம்பளச்சேரி மாடுகள் தோன்றிய உம்பளச்சேரி கிராமத்தில் மாடுகளுக்கு பொங்கல் விழா நடைபெற்றது. ஓரடியம்புலத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான ஓ.எஸ். மணியன் தனது பண்ணையில் மாட்டுப் பொங்கலை கொண்டாடினாா்.
பல்வேறு இடங்களில் மாடுகளை மந்தைகளாக கட்டி அவற்றுக்கு புதிய கயிறுகள், திஷ்டி கயிறு, சங்கு, மணிகள், சலங்கைகள் கட்டினா். மாட்டின் கொம்புகளுக்கு வா்ணம் தீட்டப்பட்டிருந்தது.