நாகப்பட்டினம்

நாகை எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

12th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 6 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுகுமாறன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பங்கேற்றிருந்த பொதுமக்களிடம் 33 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 6 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. மேலும், மீதமுள்ள மனுக்கள் மீது விரைந்து தீா்வு காணப்படும் என புகாா்தாரா்களிடம் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது புகாா்களை 10581 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்னைகள் குறித்து புகாா் தெரிவிக்கலாம் என கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுகுமாறன் தெரிவித்தாா். நாகை குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT