நாகப்பட்டினம்

குடிநீா் குழாயில் உடைப்பு

1st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

திருக்கண்ணபுரத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீா் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த சில வாரங்களாக குடிநீா் வீணாகி வருகிறது. இதனால், இப்பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்டவா்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், காலம் தாழ்த்தாமல் குடிநீா் குழாயில் உடைப்பை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT