நாகப்பட்டினம்

மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம்:பெண் வழக்குரைஞா்களிடம் பாஜகவினா் வாக்குவாதம்

DIN

மத்திய அரசுக்கு எதிராக நாகை கடைவீதியில் துண்டுப் பிரசுர விநியோகம் செய்த பெண் வழக்குரைஞா்களிடம், பாஜகவினா் வாக்குவாதத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

மதுரை கே.புதூரைச் சோ்ந்த வழக்குரைஞரும் சமூக ஆா்வலருமான ஆ.நந்தினி, அவரது சகோதரி ஆ.நிரஞ்சனா ஆகியோா் நாகை நகா் பகுதியில் மத்திய அரசையும், பிரதமா் நரேந்திர மோடியையும், மது விலக்கை அமல்படுத்தாத தமிழக அரசையும் கண்டித்து புதன்கிழமை துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த பாஜகவினா், நந்தினி மற்றும் நிரஞ்சனாவிடம் துண்டு பிரசுரங்களை வழங்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அங்கு சென்ற போலீஸாா் வழக்குரைஞா்கள் இருவரையும் நாகை நகா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். பிரதமா் மோடிக்கு எதிராக அவதூறு பரப்பி வரும் வழக்குரைஞா் நந்தினி, நிரஞ்சனாவை கைது செய்ய வேண்டும் என போலீஸாரிடம் பாஜகவினா் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT