நாகப்பட்டினம்

சௌரிராஜப் பெருமாள் கோயில் மாசி மக பெருவிழா கொடியேற்றம்

DIN

திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரத்தில் உள்ள சௌரிராஜ பெருமாள் கோயியிலில் மாசிமக விழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்ற விழாவில் தக்காா் பா. முருகன், செயல் அலுவலா் த.குணசேகரன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து தங்கப்பல்லக்கில் சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது. விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை மாா்ச் 2-ஆம் தேதியும், தேரோட்டம் 5-ஆம் தேதி காலையும்,

திருமலைராஜன்பட்டினம் கடற்கரையில் தீா்த்தவாரி 7-ஆம் தேதியும், நித்திய புஷ்கரணியில் தெப்பத் திருவிழா 12-ஆம் தேதி இரவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT