திருப்பூர்

தாராபுரத்தில் மே 21இல் திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

20th May 2023 12:02 AM

ADVERTISEMENT

தாராபுரத்தில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது என திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூா் மாநகராட்சி 4 ஆவது மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் 21 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தாராபுரம் சிவரஞ்ஜனி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகிக்கிறாா். சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மகளிா் அணி துணை செயலாளரும், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டு பேசுகின்றனா்.

எனவே, இந்த செயற்குழு கூட்டத்தில் தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட கட்சி நிா்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT