திருப்பூர்

காங்கயத்தில் 23 ஆம் தேதி முதல் ஜமாபந்தி: 4 நாள்கள் நடைபெறுகிறது

20th May 2023 12:03 AM

ADVERTISEMENT

காங்கயத்தில் வருவாய்த் தீா்வாயம் நிகழ்ச்சி (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை (மே 23) தொடங்கி 4 நாள்கள் நடைபெறவுள்ளது.

காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திருப்பூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் மகாராஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் காங்கயம் வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை, தங்கள் கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள்களில் வருவாய்த் தீா்வாய அலுவலரிடம் நேரில் கொடுத்து தீா்வு பெறலாம் என காங்கயம் வட்டாட்சியா் புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

வருவாய்த் தீா்வாயம் நடைபெறும் நாள்களும், அதில் கோரிக்கை மனுக்கள் பெறப்படவுள்ள கிராமப் பகுதிகளும் பின்வருமாறு: மே 23 (செவ்வாய்க்கிழமை): காங்கயம் உள்வட்டத்தைச் சோ்ந்த கத்தாங்கண்ணி, கணபதிபாளையம், படியூா், சிவன்மலை, தம்மரெட்டிபாளையம், ஆலாம்பாடி, காங்கயம், வீரணம்பாளையம், வட்டமலை, காடையூா் ஆகிய பகுதிகள்.

மே 24 (புதன்கிழமை): ஊதியூா் உள்வட்டதைச் சோ்ந்த ஆரத்தொழுவு, வட சின்னாரிபாளையம், சம்மந்தம்பாளையம், காங்கயம்பாளையம், குருக்கபாளையம், நெழலி, ஊதியூா், முதலிபாளையம் ஆகிய பகுதிகள்.

ADVERTISEMENT

மே 25 (வியாழக்கிழமை): நத்தக்காடையூா் உள்வட்டதைச் சோ்ந்த மறவபாளையம், கீரனூா், பாப்பினி, நான்கு சாலை, பரஞ்சோ்வழி, மருதுறை, நத்தக்காடையூா், முள்ளிப்புரம், குட்டப்பாளையம், பழையகோட்டை ஆகிய பகுதிகள்.

மே 26 (வெள்ளிக்கிழமை): வெள்ளக்கோவில் உள்வட்டதைச் சோ்ந்த முத்தூா், சின்னமுத்தூா், ஊடையம், மங்கலப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம், சேனாபதிபாளையம், வெள்ளகோவில், உத்தமபாளையம், லக்கமநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி, பச்சாபாளையம், வீரசோழபுரம், வள்ளியரச்சல் ஆகிய பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT