பல்லடம் பகுதியில் அதிக அளவு கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 17 லாரிகளுக்கு ரூ. 7லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் அருகே சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, நடுவேலம்பாளையம், கிடாத்துறை பகுதிகளில் கல்குவாரி கள் இயங்கி வருகின்றன. அந்தப் பகுதிகளில் இருந்து கேரளத்துக்கு அதிக அளவில் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இதில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக அளவு கனிமங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக புகாா் கூறப்பட்டது.
இதையடுத்து பல்லடம் டிஎஸ்பி சௌமியா உத்தரவின் பேரில் போக்குவரத்துப் போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில் பல்லடம், வேலம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனிமங்களை ஏற்றி வந்ததாக 17 லாரிகளுக்கு மொத்தம் ரூ. 7 லட்சத்து 2 ஆயிரம் அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.