நாகப்பட்டினம்

வேலை வாங்கித் தருவதாக ரூ.4.98 லட்சம் மோசடி: இளைஞா் கைது

DIN

நாகப்பட்டினம்: தனியாா் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4.98 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூரைச் சோ்ந்த நடேசன் மகன் பாலச்சந்திரன். இவா், இணையதளத்தில் வேலைக்காக பதிவு செய்திருந்தாா். இந்நிலையில், சென்னையைச் சோ்ந்த குமாா் மகன் சிலம்பரசன் என்பவா், பாலச்சந்திரனை தொடா்பு கொண்டு தனியாா் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளாா். இதை நம்பி பாலச்சந்திரன், கடந்த 2022 ஜூன் 13-ஆம் தேதி ரூ. 4.98 லட்சத்தை சிலம்பரனிடம் கொடுத்துள்ளாா்.

ஆனால், சிலம்பரசன் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் காலம் கடத்தியுள்ளாா்.

இதுகுறித்து பாலச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், நாகை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து, சிலம்பரசனை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT