நாகப்பட்டினம்

இலவச மருத்துவ முகாம்

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

 

கீழ்வேளூா்: வெளிநாடுவாழ் தமிழா்கள் நல அறக்கட்டளை நலச்சங்கம், குவைத் சிட்டி கிளினிக் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் குவைத்தில் அண்மையில் நடைபெற்றது.

மருத்துவ சேவை அணி செயலாளா் ஜான் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற முகாமில் இதயம், கண் பாா்வை குறைபாடு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. முகாமில் இந்திய - இலங்கை தமிழா்கள் 400-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு பயன்பெற்றனா்.

முகாமில் பணியாற்றிய செவிலியா்களுக்கும், சிறப்பாக செயல்பட்ட மருத்துவ சேவை குழுவினருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நெல்லை மறைக்காா் எம்.ஏ. டிவிஎஸ் குரூப் ஹைதா் அலி, குவைத் மண்டல தலைவா் எ.அப்துல் மஜிது , பூதமங்கலம் நூரப்பா,திருச்சி முபாரக் அலி உள்ளிட்ட ஏராளமானோா் முகாமில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT