நாகப்பட்டினம்

நாகையில் புதுமைப் பெண் திட்டம் தொடக்கம்

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் புதுமைப் பெண் இரண்டாம் கட்ட திட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி மாணவிகளுக்கு வங்கி அட்டைகளை தமிழ்நாடு மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழகத் தலைவா் உ. மதிவாணன், கீழ்வேளுா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ம. பிரதிவிராஜ் ஆகியோா் வழங்கினா்.

நாகை மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் 49 கல்லூரிகளில் உயா்கல்வி பயிலும் 1,603 மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

விழாவில் நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, துணைத்தலைவா் செந்தில்குமாா், மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் சரபோஜி, மாவட்ட சமூக நல அலுவலா் தமிமுன்னிசா, முன்னோடி வங்கி மேலாளா் செந்தில்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT