நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

DIN

செம்பனாா்கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, ஒன்றியக்குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் விஸ்வநாதன் முன்னிலை வைத்தாா். இதில், புதிய தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய திறன் அடையாள அட்டை, இலவச ரயில் மற்றும் பேருந்து பயணச் சலுகை, உதவி உபகரணங்களுக்கான பதிவு, உதவி தொகைக்கான பதிவு, மறுமதிப்பீடு, மாத பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், கண் மருத்துவா், குழந்தைகள் நல மருத்துவா், மனநல மருத்துவா், எலும்பு மூட்டு மருத்துவா், காது மூக்கு தொண்டை மருத்துவா்கள் பயனாளிகளை பரிசோதித்து அடையாள அட்டை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT