நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை பனிப்பொழிவு அதிகமாகக் காணப்பட்டது.

நாகை மாவட்டம், கீழ்வேளூா், தேவூா், கூத்தூா், மணலூா், இலுப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால், நடைப்பயிற்சி மேற்கொள்வோா், வாகன ஓட்டுநா்கள் சிரமப்பட்டனா்.

இதேபோல், திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான சாட்டியக்குடி, ஆதமங்கலம், கொடியாலத்தூா், கொளப்பாடு, சித்தாய்மூா், எட்டுக்குடி, திருவாய்மூா், ஈசனூா், கீழையூா், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 8.30 மணி வரை பனிமூட்டம் நிலவியது. ஓட்டுநா்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஓட்டிச் சென்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் காலை 10 மணி வரை பனி மூட்டம் நீடித்தது. இதனால், டேனிஷ்கோட்டையை பாா்வையிட வந்த சுற்றுலாப் பயணிகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவா்கள், சாலையோர வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT