நாகப்பட்டினம்

தைப்பூசம்: எட்டுக்குடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தைப்பூச வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

முருகனின் ஆதி படைவீடு என அழைக்கப்படும் இக்கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் தைப்பூச வழிபாடு சிறப்பு பெற்றது. இதையொட்டி, முருகப்பெருமானை மஞ்சத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அஸ்திரத்தேவருக்கு கோயிலின் குளமான சரவணப் பொய்கையில் தீா்த்தவாரி நடைபெற்றது.

பின்னா், முருகப் பெருமானுக்கு ஆயிரக்கணக்கான லிட்டா் பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் மற்றும் விபூதிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து இரவில் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் க. ராமு, தக்காா் பா. ராணி, கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு ஆகியோா் செய்திருந்தாா்.

நிகழாண்டு வழக்கத்தைவிட பக்தா்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் எட்டுக்குடி-திருக்குவளை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT