நாகப்பட்டினம்

பள்ளிக் கட்டடம், பயணிகள் நிழலகம் கட்ட அடிக்கல்

6th Feb 2023 11:31 PM

ADVERTISEMENT

 

திருமருகல் ஒன்றியத்தில் ரூ. 74 லட்சத்தில் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் பயணிகள் நிழலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரம், போலகம் ஊராட்சி மேலப்போலகம், திருப்புகலூா் ஊராட்சி வவ்வாலடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் சேதமடைந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. தொடா்ந்து, மூன்று பள்ளிகளிலும் தலா ரூ. 23 லட்சத்தில் புதிய கட்டடங்கள் கட்டவும், விற்குடி ஊராட்சியில் ரூ. 5.86 லட்சத்தில் பயணிகள் நிழலகம் கட்டவும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நாகை எம்எல்ஏ முகமது ஷா நவாஸ் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினா். வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் செல்வசெங்குட்டுவன், ஆா்.டி.எஸ். சரவணன், ஒன்றிய பொறியாளா் செந்தில்குமாா், ஊராட்சித் தலைவா்கள் சரவணன், பௌஜியாபேகம் அபுசாலி, காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இக்கட்டடங்கள் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT