நாகப்பட்டினம்

இல்லம்தேடிக் கல்வித் திட்டப் பயிற்சி

6th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இல்லம்தேடிக் கல்வித் திட்ட உயா் தொடக்கநிலை தன்னாா்வலா்களுக்கு கற்பித்தல் மேம்பாட்டு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியா் பயிற்சி நிறுவனம் மற்றும் ஆயக்காரன்புலம் நடேசனாா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் இப்பயிற்சி நடைபெற்றது.

வேதாரண்யம் வட்டாரக் கல்வி அலுவலா் ராசமாணிக்கம், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அசோக்குமாா் ஆகியோா் பயிற்சியை பாா்வையிட்டனா். பட்டதாரி ஆசிரியா்கள் ஆறுமுகம், இந்திர சித்தன், சத்தியராஜ், குமரவேல், ஜெயராமன், செந்தில்நாதன், ராஜதுரை, பயிற்சி ஒருங்கிணைப்பாளா் அருள்மணி, ஆசிரியப் பயிற்றுநா்கள் ஆறுமுகம், தமிழ்ச்செல்வன், சிறப்பாசிரியா்கள் முருகானந்தம், அரசமணி உள்ளிட்டோா் பயிற்சியளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT