நாகப்பட்டினம்

திருக்களாச்சேரி அம்மன் கோயில் குடமுழுக்கு

6th Feb 2023 12:23 AM

ADVERTISEMENT

பொறையாா் அருகே திருக்களாச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரி கிராமத்தில் ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாகபூஜை நிறைவடைந்ததும், விமானக் கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், சீதாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT