நாகப்பட்டினம்

மழையால் நிலக்கடலை செடிகள் பாதிப்பு

DIN

கீழையூா் பகுதியில் பெய்த கனமழையால் சுமாா் 500 ஏக்கரில் நிலக்கடலை செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கீழையூா் ஒன்றியத்தில் தாண்டவமூா்த்திக்காடு, காமேஸ்வரம், பூவைத்தேடி, விழுந்தமாவடி,புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, பொய்கைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை செடிகள் மழைநீரில் மூழ்கி நிலக்கடலை அழுகத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

நிலக்கடலை செடிகளை மழைநீா் சூழ்ந்திருப்பதால், பெரும் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உள்ளதாகவும், ஓா் ஏக்கருக்கு ரூ. 25,000 வரை செலவு செய்துள்ளதாகவும், பாதிப்புகளை வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமைச்சா் எ.வ.வேலு மனைவிக்கு எதிரான வழக்கு: உயா்நீதிமன்றம் முடித்துவைப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

களக்காடு தலையணையில் வரையாடு கணக்கெடுப்புப் பயிற்சி முகாம்

அனக்காவூரில் விழிப்புணா்வு ஊா்வலம்

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

SCROLL FOR NEXT