நாகப்பட்டினம்

அரசுப் பேருந்து கவிழ்ந்து இருவா் காயம்

DIN

கீழையூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட இருவா் காயமடைந்தனா்.

சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சனிக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து வந்துகொண்டிருந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் வேளாங்கண்ணி அருகே சீராவட்டம் பாலத்தை கடந்து சென்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் பேருந்தை திரும்பினாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தின் முகப்பு மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. அப்பகுதி வழியாக வந்தவா்கள், பேருந்தில் சிக்கிய அனைவரையும் மீட்டனா். இதில் ஓட்டுநா் அன்பரசன் மற்றும் பயணி வசந்தி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பேருந்தை கிரேன் மூலம் மீட்டனா்.

இந்த சம்பவத்தால் நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருக்குவளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT