நாகப்பட்டினம்

தொடா்மழை: நெற்பயிா்கள் பாதிப்பு பகுதியில் ஆய்வு

DIN

கீழ்வேளூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்கள் பாதிப்பு குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடா்மழை காரணமாக கீழ்வேளூரில் 18,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிா்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 7,000 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் சாய்ந்து மூழ்கியுள்ளது. மேலும், 3,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து பயறு பயிா்களும் மழைநீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் கீழ்வேளூா் சுற்றுவட்டார பகுதிகளில் நாகப்பட்டினம் வேளாண்மை இணை இயக்குநா் ஜாகுலா அகண்ட ராவ் மழை நீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். கீழ்வேளூா் ஒன்றியம் கொடியாலத்தூா், வலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது.

ஆய்வின்போது கீழ்வேளூா் உதவி வேளாண் இயக்குநா் டி. ராஜலட்சுமி, துணை வேளாண்மை அலுவலா் எ. பிரான்சிஸ் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா் சந்தோஷ் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT