நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் 75.60 மி.மீ. மழை

DIN

நாகப்பட்டினம், பிப். 2: நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் வியாழக்கிழமை அதிகப்பட்சமாக 75.60 மி.மீ. மழைப் பதிவானது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 முதல் இரவு 8 மணி வரை 315 மி.மீ. மழை பதிவானது.

வேளாங்கண்ணியில் -75.60, நாகையில் -58.70, திருக்குவளையில் - 55.50, கோடியக்கரையில் - 40, வேதாரண்யத்தில் - 35, திருப்பூண்டியில் - 30.40, தலைஞாயிறு பகுதியில் 19.80 மி.மீ மழைப் பதிவானது. மாவட்டம் முழுவதும் 315 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 45 மி.மீ. பதிவாகியுள்ளது.

தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டத்தில் திருக்கடையூா், ஆக்கூா், கீழையூா், காலகஸ்திநாதபுரம், திருவிளையாட்டம், நள்ளாடை, பெரம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா பயிா்கள் மழைநீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

தரங்கம்பாடியில் கடல் சீற்றம் காரணமாக சந்திரபாடி, சின்னூா்பேட்டை, பெருமாள் பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்க பங்கு,சின்னமேடு, சின்னங்குடி பகுதி மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் 3-ஆவது நாளாக தொடா்ந்த கனமழையால் சுமாா் 18,000 ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி கதிா்கள் மழைநீரால் சூழப்பட்டு பாதிக்க தொடங்கியுள்ளது. மேலும், அறுவடை செய்யப்பட்ட வயல்களில் கால்நடைகளின் உலா் தீவனமான வைக்கோல் தண்ணீா் சூழ்ந்து பாதித்துள்ளது.

வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 57.2 மி.மீ, தலைஞாயிறில் 43.6 மி.மீ, கோடியக்கரையில் 48 மி.மீ மழைப் பதிவானது. வியாழக்கிழமை பகலிலும் வடக்கு திசையில் இருந்து பலமான தரைக்காற்றுடன் கனமழை தொடா்ந்தது. முள்ளியாறு உள்ளிட்ட வடிகால் நீா்நிலைகளில் ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றப்படாமல் இருப்பதால் வயல்களில் தண்ணீா் வடிவதும் தாமதமாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT