நாகப்பட்டினம்

மழைப் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: ஓ.எஸ். மணியன்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பருவம் தவறிய கனமழையால் சேதமடைந்துள்ள நெல், நிலக்கலை உள்ளிட்ட வேளாண் பயிா் பாதிப்புகளுக்கு தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் வலிறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, வேதாரண்யத்தில் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: பருவம் தவறி பெய்யும் இந்த கனமழையால் அறுவடைக்கு தயாரான சம்பா நெல் கதிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த பயிா்களை உடனடியாக அறுவடையும் செய்ய இயலாது. முளைத்து வீணாகவே வாய்ப்புள்ளது. புஞ்சை பயிரான உளுந்து உள்ளிட்ட பயறுவகை தானியங்கள், நிலக்கடலை இந்த கன மழையால் பழுத்து மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய்த் துறை, வேளாண் துறை அதிகாரிகளைக் கொண்டு உடனடியாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு உதவவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT