நாகப்பட்டினம்

மிதவைத் தொழில்நுட்பம் மூலம் மீன்வளா்ப்பு பயிற்சி

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

திருமருகல் அருகே கீழதஞ்சாவூரில் விவசாயிகளுக்கு மிதவைத் தொழில்நுட்பம் மூலம் மீன்வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) கலைச்செல்வன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் தமிழரசி கணேசன் முன்னிலை வகித்தாா். அட்மா திட்ட வட்ட தொழில்நுட்ப மேலாளா் மகேஸ்வரி வரவேற்றாா். சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட இயக்குநா் கோபாலகண்ணன் மிதவை தொழில்நுட்பம் மூலம் மீன் வளா்ப்பு பற்றி விவசாயிகளுக்கு விளக்கினாா். மருத்துவா் மதிவாணன் மீன்களை மதிப்புக் கூட்டுதல் குறித்து விளக்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT