நாகப்பட்டினம்

நாகையில் பிப்.13-இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகையில் தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் பிப்.13-ஆம் தேதி நடைபெறுகிறது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம், பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிப்.13-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், நாகை, கோவை மற்றும் சென்னையில் உள்ள முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். எனவே, இந்த முகாமில் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐடிஐ பயிற்சி முடித்த பயிற்சியாளா்கள் புகைப்படம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு 04365-250126 என்ற தொலைபேசி எண்ணிலும், நாகை அரசு ஐடிஐ வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலும் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT