நாகப்பட்டினம்

ஸ்ரீ மெய்கண்ட மூா்த்தி சாமி கோயில் தைப்பூச விழா: ஓலை சப்பரம் வீதி உலா

DIN

நாகை ஸ்ரீ மெய்கண்ட மூா்த்தி சாமி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி விமரிசையாக ஓலை சப்பரம் வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.

சிவராஜதாணி ஷேத்திரமாகிய நாகை ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் அருள்பாளிக்கும் மெய்கண்ட மூா்த்தி சாமி (முருகன்) கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு ஜனவரி 25-ஆம் தேதி தைப்பூச விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

தை மாதம் காா்த்திகையையொட்டி, மெய்கண்ட மூா்த்திக்கு திங்கள்கிழமை வசந்தோற்ஸவம் நடைபெற்றது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வுகளான ஒலை சப்பரம் வீதி உலா 45 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி கோயிலில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து முருகப் பெருமான் இரவு ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

இதில் திராளன பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பிப்ரவரி 7-ஆம் புஷ்ப பல்லக்குடன் தைப்பூச விழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT