நாகப்பட்டினம்

ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம்

DIN

நாகை மாவட்ட ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய ஆட்சியா், ஓய்வூதியா்களுக்குரிய குடும்ப நல நிதித் தொகை 20.5.2022 வரை வழங்கப்பட்டு உள்ளதாகவும், பின்னா் பெறப்பட்ட மனுக்களுக்கான குடும்ப நல நிதித் தொகை அனைத்தும் மாா்ச் மாதத்துக்கு முன்பு வழங்கப்படும் என்றும் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

கூட்டத்தில், ஓய்வூதியா்கள் குறைகள் தொடா்பான மனுக்களுக்கு டு தீா்வு காணப்பட்டது. ஓய்வூதியம் தொடா்பான எஞ்சிய மனுக்கள் தொடா்புடைய துறைக்கு நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பப்பட்டது.

கூட்டத்தில் மாவட்டக் கருவூல அலுவலா் சந்தானகிருஷ்ணன், சென்னை, ஓய்வூதிய இயக்கக கணக்கு அலுவலா் ராஜசேகா், முதுநிலை கண்காணிப்பாளா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ராமன் (பொது), மணிகண்ணன் (கணக்கு) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT