நாகப்பட்டினம்

சாய்பாபா கோயிலுக்கு பால்குட ஊா்வலம்

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கீழையூா் அருகே காரப்பிடாகையில் உள்ள ஸ்ரீசிவ சாய்பாபா கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற முதலாமாண்டு பால்குட பல்லக்கு ஊா்வலத்தில் ஏராளமானோா் பால்குடங்கள் எடுத்து வந்தனா்.

கற்பக விநாயகா் கோயிலிலிருந்து பக்தா்கள் பால்குடத்தை ஊா்வலமாக எடுத்து வந்து சாய்பாபாவிற்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா். தொடா்ந்து, அஷ்டோத்திர நாமாவளி அா்ச்சனை, மஹாதீபாராதனை, 18 வகையான மலா்களைக்கொண்டு, புஷ்பாஞ்சலி சேவை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT