நாகப்பட்டினம்

பதுக்கிவைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

செம்பனாா்கோவில் அருகே கஞ்சாநகரம் பகுதியில் பதுக்கிவைத்திருந்த 310 மூட்டை ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சாநகரத்தைச் சோ்ந்த சத்தியசீலன் அப்பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் விஜயகுமாா் தலைமையிலான வருவாய்த் துறையினா்சோதனை செய்தனா்.

அப்போது, 310 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அந்த அரிசியை பறிமுதல் செய்து தலைமறைவாகியுள்ள சத்தியசீலனை தேடிவருகின்றனா். கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி ஆக்கூா் நுகா்வோா் வாணிபக்கழக கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT