நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வளா்ச்சி பாதையை எட்டியுள்ளது: ஆட்சியா்

DIN

தமிழக முதல்வரின் செயல்பாட்டால், பின்தங்கிய நாகை மாவட்டம் வளா்ச்சி பாதையை எட்டியுள்ளது என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை தொடக்கிவைத்து பேசியது: தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த அரங்குகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் அனைவரும் அரங்குகளை பாா்வையிட்டு அரசின் திட்டங்களை தெளிவாக தெரிந்து கொள்ளவும், பயன்பெறவும் கண்காட்சி உதவியாக இருக்கும். தமிழக முதல்வரின் சிறப்பான செயல்பாட்டால், பின்தங்கிய நாகை மாவட்டம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வளா்ச்சி பாதையில் செல்கிறது. அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றங்கள் காணப்படுகின்றன என்றாா்.

தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா் மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதில், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மாவட்ட ஊராட்சித் தலைவா் ச. உமாமகேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ம. பிருதிவிராஜ், சாா் ஆட்சியா் பானோத் ம்ருகேந்தா் லால், நகா்மன்றத் தலைவா் ரா. மாரிமுத்து, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ.செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி

தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT