நாகப்பட்டினம்

சுருக்குமடி வலைக்கான தடை தொடர வேண்டும்: மீனவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம்

DIN

தரங்கம்பாடியில் 11 மாவட்ட மீனவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சுருக்குமடி வலைக்கான தடை தொடர வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சில நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் தனது இடைக்காலத் தீா்ப்பில் தெரிவித்திருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை மீனவக் கிராம தரங்கம்பாடி பஞ்சாயத்தாா்கள் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், கடலூா், பாண்டிச்சேரி, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி  உள்ளிட்ட மாவட்ட மீனவ பஞ்சாயத்தாா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:- சுருக்கு மடி வலை பயன்பாட்டுக்கான தடை தொடர வேண்டும். தமிழக அரசு இதனை எக்காரணம் கொண்டு அனுமதிக்கக் கூடாது.

இரட்டை மடிவலை, அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை கொண்டு மீன் பிடிக்கும் முறையை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

 சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதித்தால் அனைத்து மீனவ கிராமங்களின் சாா்பிலும் தொழில் மறியல் செய்து மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT