நாகப்பட்டினம்

பேருந்து - இருசக்கர வாகனம்மோதல்: தாய், மகன் பலி

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் தாய், மகன் இருவரும் உயிரிழந்தனா்.

திருவாரூா் மாவட்டம், சுந்தரவிளாகம் பகுதியைச் சோ்ந்த கணேஷ் (35), அவரது தாயாா் சுந்தராம்பாள் (75) இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை திருவாரூரிலிருந்து நாகை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். கீழ்வேளூரை அடுத்துள்ள அகரகடம்பனூா் அருகே சென்றபோது எதிரே நாகூரிலிருந்து நத்தம் நோக்கி சென்ற அரசுப் பேருந்துடன் இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியதில் கணேஷ், சுந்தராம்பாள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

கீழ்வேளூா் போலீஸாா் சடலங்களை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, பேருந்து ஓட்டுநா் பாண்டி (46), நடத்துநா் மகேந்திரன் (40) ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT