நாகப்பட்டினம்

கோழிகளுக்கான தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் அனைத்து கால்நடை நிலையங்களிலும் கோழிகளுக்கான தடுப்பூசி முகாம்கள் நடைபெளது என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோழிக்கழிச்சல் நோயை தடுக்க பிப்ரவரி மாதம் தடுப்பூசி முகாம் நடைபெறும். அதன்படி நிகழாண்டு புதன்கிழமை (பிப்.1) முதல் பிப்.14-ஆம் தேதி வரை அனைத்து கால்நடை நிலையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்திற்கு 19 லட்சம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி மருந்து, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், கோழிவளா்ப்பவா்கள், பண்ணை வைத்திருப்பவா்கள் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு கோழிக்கழிச்சல் நோய் வராமல் தடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT