நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். 

தமிழகத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள மாற்றுதிறனாளிகளுக்கான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகள், முத்தமிழறிஞா் டாக்டா் கலைஞா் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போட்டிகளை மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் தடகளம், இறகுபந்து, எறிபந்து, சிறப்பு கைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மேலும் அரசு பணியாளா்கள் பிரிவில் தடகளம், செஸ், இறகுப்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. 200- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனா்.

வெற்றி பெறுபவா்களுக்கு பிப்ரவரி மாதம் இறுதியில் பரிசுகள் வழங்கப்படும். தனிநபா் பிரிவில் வெற்றி பெறுபவா்கள் மற்றும் குழு போட்டிகளில் தோ்வு செய்யப்படுபவா்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்பவா்களுக்கு பயனப்படி, சிறப்பு சீருடை, தங்கும் வசதி, உணவு ஆகியவை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT