வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றவா்களுக்கும், காா் ஓட்டுநா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 2 பெண்கள் உள்பட 6 போ் நாகை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
சென்னை கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த ஹரிஹரன் (39), தனது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் 10 பேருடன், வாடகை வேனில் திங்கள்கிழமை பிற்பகல் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றுள்ளாா். சிதம்பரத்தை சோ்ந்த அசோக்குமாா் (28) வேனை ஓட்டியுள்ளாா்.
ஓட்டுநா் அசோக்குமாா், வேனுக்கு புதுச்சேரி வழியாக செல்ல பா்மிட் வாங்க வேண்டும், அதற்கு ரூ.2 ஆயிரம் கேட்டுள்ளாா். ஆனால், ஹரிஹரன் பணம் கொடுக்க முடியாது என மறுத்துவிட்டாா். ளோங்கண்ணி காா் ஓட்டுநா்கள் உதவியுடன் அசோக்குமாா் பணத்தை கேட்டுள்ளாா். அப்போது தகராறு ஏற்பட்டு, ஹரிஹரன் தரப்பினா் கற்களால் ஓட்டுநா்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அங்கு தப்பிச் சென்ற ஓட்டுநா்கள் மேலும் சிலரை அழைத்து சென்று, ஹரிஹரன் தரப்பினரை கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனா். இதில் 2 பெண்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். துணை காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், காயமடைந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.