இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை, கல்வித்துறையில் இணைக்கக் கூடாது என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு பொய்கை நல்லூா் நந்திநாதேசுவரா் கோயில் முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் முத்தையன், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கை மனு: தமிழகத்தில் இந்து கோயில்கள் வளா்ச்சிக்காக நிா்வாகம் சாா்பில் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள கோயில் நிா்வாகம் சாா்பில் நடத்தப்படும் பள்ளிகளை, கல்வித்துறையில் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய கோயில்களின் நிா்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளை, கல்வித்துறையில் இணைக்கவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. எனவே, கோயில்களின் நிா்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளை, கல்வித்துறையில் இணைக்கும் நடவடிக்கையும் கைவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.