நாகப்பட்டினம்

சொத்து வரி செலுத்துவோருக்கு 5 % ஊக்கத்தொகை

26th Apr 2023 12:00 AM

ADVERTISEMENT

கீழ்வேளூா் முதல்நிலை பேரூராட்சியில் 2023 - 2024 நிதியாண்டில் முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்.30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் வரி தொகையில் 5 % ஊக்கத் தொகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஊக்கத்தொகை வரி விதிப்பு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 5,000 அளிக்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் வரியை செலுத்தி ஊக்கத்தொகை பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT