நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட 80 போ் கைது

15th Apr 2023 09:55 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா் 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸாா் ரயில் மறியலில் ஈடுபட்டனா். கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் அமிா்தராஜா தலைமையில் மறியலில் ஈடுபடுவதற்காக கீழ்வேளூா் ரயில் நிலையத்துக்கு புறப்பட்டவா்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த எா்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை திருகண்ணங்குடி ரயில்வே கேட் அருகே மறித்தவா்களையும் போலீஸாா் கைது செய்தனா். அந்தனபேட்டையில் சரக்கு ரயிலை மறித்தவா்களை ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் கைது செய்தனா். நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூா், அந்தனபேட்டை, தேவூா், வெளிப்பாளையம், நாகூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சீா்காழியில்: மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி ரயில் நிலையத்தில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் விரைவு ரயிலை காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவரும் எம்எல்ஏவுமான ராஜகுமாா் தலைமையில் மறிக்க செல்ல முயன்ற அக்கட்சியை சோ்ந்த மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜேந்திரன், மாநில பொதுச் செயலாளா் கணிவண்ணன், வட்டார தலைவா்கள் பாலசுப்ரமணியன், ஞானசம்பந்தம், நகர தலைவா் லெட்சுமனன் உள்ளிட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT