நாகப்பட்டினம்

பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

DIN

திருமருகல் அருகே திருப்பயத்தங்குடியில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பயத்தங்குடி வளப்பாற்றின் குறுக்கே ரூ. 1.55 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் வழியாக திருப்பயத்தங்குடி, பில்லாளி, கீழப்பூதனூா், திருச்செங்காட்டங்குடி

தென்னமரக்குடி, நத்தம், வீரபெருமாநல்லூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திருவாரூா்,

நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூா் சென்று வர முக்கிய வழியாக உள்ளது. மேற்கண்ட பகுதிகளை சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வரவும் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள், மாணவா்கள் போக்குவரத்துக்கு சிரமப்பட்டு வருகின்றனா். கடைமடை பகுதியான திருமருகல் பகுதிகளுக்கு காவிரி நீா் வந்து சோ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றைக் கடக்க குழாய் கொண்டு தற்காலிக பாலம் ஒன்றை அமைத்துள்ளனா். அதில் அப்பகுதி மக்கள் சென்று வந்தனா்.

இந்நிலையில் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக பாலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஆற்றை கடக்க முடியாமல் அப்பகுதி மக்கள் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் பயன்இல்லை. எனவே, பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT