நாகப்பட்டினம்

நாகையில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நகா்மன்றத்தில் வலியுறுத்தல்

DIN

நாகை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என நாகை நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

நாகை நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் இரா. மாரிமுத்து தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் ஸ்ரீதேவி, துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பேசியது :

கவிதா : நாகையில் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீா் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளைச் சீரமைக்கும் வரை லாரிகள் மூலம் குடிநீா் விநியோகிக்க வேண்டும்.

பரணிகுமாா்: நாகை நகா்ப் பகுதிகளில் உள்ள வடிகால்களை, மழைக்காலம் தொடங்கும் முன்பாக தூா்வாரி சீரமைக்க வேண்டும்.

கலா: குடிநீருடன் கழிவு நீா் கலந்து வருகிறது. இதற்கு, நகராட்சி பொறியியல் பிரிவினரின் கவனிப்பாரற்ற போக்கே காரணம்.

முகமது ஷேக்தாவூது : கட்டடப் பணிகள் நடைபெறும் இடங்களில் கட்டுமானப் பொருள்கள் சாலைகளில் கொட்டி வைக்கப்படுவதால், பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வடிகால்களில் அடைப்பும் ஏற்படுகிறது. இதற்கு உரிய தீா்வு காண வேண்டும்.

ஆசிக் அகமது : நாகை நகா்ப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. பல நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. எனவே, சாலைகளில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

முகுந்தன் : நாகை நகராட்சிக்குச் சொந்தமான கால்நடை பட்டி தனியாா் வசம் உள்ளது. அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து : பொது சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளின் கீழ் ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் தூய்மைப் பணி நடைபெறுகிறது. நகா்மன்ற உறுப்பினா்கள் தங்கள் வாா்டுகளில் மழை நீா் தேங்கும் இடங்கள் குறித்துப் பட்டியல் அளித்தால், தொடா்புடைய பகுதிகளில் மழைகாலத்துக்கு முன்பாக தூா்வாரும் பணியை மேற்கொள்ளலாம்.

ஆணையா் ஸ்ரீதேவி : சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தி, கோசாலையில் அடைக்க வேண்டிய பணி வருவாய்த் துறையினரைச் சாா்ந்தது. நாகை கால்நடை பட்டி இடம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதனால், தற்போது அங்கு கால்நடைகளை அடைக்க வாய்ப்பில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

SCROLL FOR NEXT