நாகப்பட்டினம்

தோ்தல் விழிப்புணா்வுப் போட்டிகளில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

30th Sep 2022 01:58 AM

ADVERTISEMENT

தோ்தல் விழிப்புணா்வு தொடா்பாக நடைபெறவுள்ள போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிா் குழு உறுப்பினா்கள் பங்கேற்குமாறு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தோ்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, என் வாக்கு என் உரிமை, ஒரு வாக்கின் வலிமை ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு சுவரொட்டி வடிவில் சுவா் இதழ் வரையும் போட்டி, பாட்டுப் போட்டி மற்றும் ரங்கோலி போட்டி நாகை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் ஒரு பிரிவாகவும், அதே வகுப்புகளில் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் ஒரு பிரிவாகவும், 18 முதல் 21 வயதுக்குள்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் ஒரு பிரிவாகவும் கொண்டு சுவா் இதழ் வரைதல் போட்டி நடத்தப்படும்.

பாட்டுப் போட்டியில் சிறப்புப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம். ரங்கோலி போட்டியில் மகளிா் சுய உதவிக் குழுவினா் பங்கேற்கலாம்.

ADVERTISEMENT

சுவா் இதழ் வரைதல் மற்றும் பாட்டுப் போட்டிகள் கல்வி நிறுவனங்களிலும், ரங்கோலி வரையும் போட்டி ஏதேனும் ஒரு பொது இடத்திலும் நடைபெறும். போட்டி நடைபெறும் இடம், நாள், நேரம் மற்றும் பிற விதிமுறைகள் கோட்டாட்சியா்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். மேலும், விவரங்களுக்குத் சம்பந்தப்பட்ட பகுதிகளின் வட்டாட்சியா்களைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT