நாகப்பட்டினம்

உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் தொடக்கம்

30th Sep 2022 10:23 PM

ADVERTISEMENT

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் தலைமகள் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சித்துறையின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் மகளிரை பங்குதாரா்களாக் கொண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. விழாவுக்கு, நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமை வகித்து, உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலா் வி. சுந்தரபாண்டியன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழரசி, தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT