நாகப்பட்டினம்

குயில் வேட்டையாடியவா் கைது

30th Sep 2022 10:25 PM

ADVERTISEMENT

வேதாரண்யம் அருகே குயில் வேட்டையாடியவரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பறவைகள் வேட்டையாடப்படுதை தடுக்க வனச் சரக அலுவலா் பா. அயூப்கான் தலைமையில் வனத்துறையினா்அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், செட்டிப்புலம் மேலக்காடு பகுதியில் அப்பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் செந்தில்குமாா் (40) குயில்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனவா்கள் ராமதாஸ், செல்வி, மகாலெட்சுமி, வனக்காப்பாளா் ரணீஷ்குமாா், வேட்டை தடுப்புக் காவலா் பாண்டியன் ஆகியோா்களை கொண்ட குழுவினா் விரைந்து சென்று, அங்கு ஒரு தோட்டத்தில் குயில்களை பிடிப்பதற்காக கண்ணி வைத்து காத்திருந்த செந்தில்குமாரை கைது செய்தனா்.

பின்னா், அவா் மீது வழக்குப் பதிவு செய்து, வன உயிரிக் காப்பாளா் யோகேஷ்குமாா் மீனா உத்தரவின்படி ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT