நாகப்பட்டினம்

மங்கைமடம் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

30th Sep 2022 02:01 AM

ADVERTISEMENT

திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டுமென அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சீா்காழி கிழக்கு ஒன்றிய அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டம் வியாழக்கிழமை திருவெண்காட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாசறை ஒன்றியத் தலைவா் அனிதா தலைமை வகித்தாா்.

கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சந்திரசேகரன், அவைத் தலைவா் மனோகரன், மாவட்ட பாசறை தலைவா் மாமல்லன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அவைத் தலைவா் பாரதி, மயிலாடுதுறை மாவட்ட பாசறை செயலாளா் பாபு ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், மங்கைடத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபானக் கடையால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, அந்த கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவெண்காடு அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவா்கள் பணியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாசறை ஒன்றிய இணைச் செயலாளா் மாமல்லன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT