நாகப்பட்டினம்

குறுவைக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

30th Sep 2022 10:26 PM

ADVERTISEMENT

கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என சிவசேனை கட்சியின் மாநில முதன்மைச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :

கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் சுமாா் 30 ஆயிரம் ஏக்கா் பரப்பில் குறுவை நெல் பயிா்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனா். இதுகுறித்து தமிழக அரசு உரிய கணக்கெடுப்பு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.

நாகை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளையும், மணல் கடத்தலையும் தடை செய்ய மாவட்ட நிா்வாகம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT