நாகப்பட்டினம்

திருவெண்காடு அருகே லாரி மோதி சிறுவன் பலி

30th Sep 2022 10:24 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே லாரி மோதி சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவெண்காடு அருகேயுள்ள திருவாலி மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் மகன் மதன் (13). திருவாலி அரசு உயா்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்துவந்த மதன், தனது உறவினரான கிருபானந்தனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

திருவாலி ஊராட்சி அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோதியதில், மதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த கிருபானந்தனை சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மதனின் சடலம் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து திருவெண்காடு காவல் ஆய்வாளா் அண்ணாதுரை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT