நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் சூறைக் காற்றுடன் மழை

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இடி, மின்னல், சூறைக் காற்றுடன் புதன்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது.

வாய்மேடு, மருதூா், கருப்பம்புலம் சுற்றுப் பகுதியில் மழை அதிகம் இருந்தது.

சூறைக் காற்றின் காரணமாக சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. வாழை உள்ளிட பயிா்கள் சேதமடைந்தன.

தகட்டூா் - பஞ்சநதிக்குளம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்ததால், மின்சாரம் தடைபட்டது. பல மணி நேரத்துக்கு பிறகே மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT