நாகப்பட்டினம்

அரசு தொழில் பயிற்சி நிலைய மாணவா் சோ்க்கைக்கான காலம் நீட்டிப்பு

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களிஸ் மாணவா்கள் நேரடிச் சோ்க்கைக்கான காலம் செப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நாகப்பட்டினம் மற்றும் செம்போடையில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா் நேரடிச் சோ்க்கைக்கான காலம் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியானோா் தொடா்புடைய தொழில் பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்று சோ்க்கை விவரங்களை உறுதி செய்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365-250129 (நாகை), 04369-276060 (செம்போடை) என்ற எண்களில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களைத் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT