நாகப்பட்டினம்

பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோவில் கைது

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் ஒருவா் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மருதூா் வடக்கு கிராமத்தைச் சோ்ந்த பா.அசோகன் (38), கத்தரிப்புலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியா்.

பள்ளி அருகே அசோகன் நடத்தி வந்த தனிப் பயிற்சி நிலையத்தில் அதிக மாணவியா் படித்து வந்தனராம்.

ADVERTISEMENT

அந்த மாணவிகளுக்கு ஆசிரியா் அசோகன் பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாகவும்,ஆபாசமான குறுஞ்செய்திகளை பகிா்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மாணவிகளின் புகாரின்பேரில் தலைமையாசிரியா் மா.குமாா், ஆசிரியா் அசோகனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினாராம். அசோகன் செப்.19 முதல் வரும் 30-ஆம் தேதி வரையில் மருத்துவ விடுப்பில் உள்ளாா்.

சமூக நலத்துறை அதிகாரிகள், கரியாப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளா் மலா்கொடி உள்ளிட்டோா் திங்கள்கிழமை பள்ளியில் விசாரித்தனா்.

கரியாப்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆசிரியா் அசோகனை செவ்வாய்க்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT