நாகப்பட்டினம்

ஒரத்தூா் பகுதி மக்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கக் கோரிக்கை

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருமருகல்: நாகை அருகே ஒரத்தூா் பகுதி மக்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மக்கள் முன்னேற்ற பொது நலச் சங்கத் தலைவா் நீ. விஜயராகவன் விடுத்துள்ள கோரிக்கை: கீழ்வேளூா் அருகேயுள்ள ஒரத்தூா் ஊராட்சியில் புதிதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கடைநிலை ஊழியா்களாக படித்த மற்றும் படிக்காத ஏழை, எளிய வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வரும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அப்பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT